அதிக பேச்சு வேண்டாமே!
ஜூலை 31,2011,
11:07  IST
எழுத்தின் அளவு:

* சகமனிதர்களிடம் அன்பு செலுத்தாமல், மணிக்கணக்காக தியானம் செய்வதால் பலனேதும் இல்லை. உண்மையான ஆன்மிக சாதனை என்பது அனைவருடனும் கைகோர்த்து சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பது தான்.
* நாடுகள் பல ஆயினும் மண் ஒன்றே. நட்சத்திரங்கள் பல ஆயினும் வானம் ஒன்றே. பசுக்கள் பல ஆயினும் பால் ஒன்றே. நகைகள் பல ஆயினும் தங்கம் ஒன்றே. இவ்வாறு அனைத்து உயிரினங்களிலும் ஒன்றாகக் கருதி சேவை புரியும் போது தான் ஆனந்தம் ஏற்படுகிறது.
* உண்மையான ஆன்மிக சாதனை என்பது வெறும் ஜெபமோ, தியானமோ அல்ல. அனைத்து உயிர்களுக்காகவும் பாடுபடுவதே ஆன்மிகம்.
* சக்தியை வீணாக்காதீர்கள். சக்தி தான் இறைவன், புனிதமற்ற பார்வையால், தீய எண்ணங்களால், தீயவற்றைக் கேட்பதால், அதிகமாக பேசுவதால் இன்றைய இளைஞர்கள் அதிகமான சக்தியை இழக்கிறார்கள். இதனால் மவுனத்தை அதிகம் கடைபிடிக்க வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement