விசாரணைக்காலம் வந்தே தீரும்
ஜூலை 31,2011,
11:07  IST
எழுத்தின் அளவு:

* என்னுடைய மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம் தான். மறுமை- அது தான் நிலையான (இன்பம் தரும்) வீடு.
* விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை, எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) நம்புவதில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
* நன்மையும் தீமையும் சமமாகிவிடாது, (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைத் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள், அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, நண்பனைப் போல் காண்பீர்கள்.
* எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகின்றானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம்.
- குர்ஆன்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement