நல்லவனாக இருக்கப் பழகு
ஜூலை 31,2011,
11:07  IST
எழுத்தின் அளவு:

* எவ்வளவு கொடுக்க நினைத்தாலும், அதை மனமுவந்து கொடுத்தால் போதும். மனமுவந்து வழங்குபவரே கடவுளுக்கு உகந்தவர்.
* பிறரிடமிருந்து பெறுவதைவிட பிறருக்கு அதிகம் கொடுப்பதே கடவுளின் அருளை தரும்.
* விருந்து, விழா நடத்தும் போது ஏழைகள், ஊனமுற்றோரை வரவழைத்துக் கொள். நீ அருள் பெறுவாய், ஏனெனில், அவர்களால் உனக்கு திருப்பித்தர முடியாது.
* தேவலோகத்திலுள்ள உன் தந்தை நல்லவராக இருப்பது போல், நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
* சுயநலத்தைத் தேடாதீர், ஒவ்வொருவரும் பிறர் நலத்தையே தேடவேண்டும்.
* கடவுள் உங்களுக்கு சுதந்திரத்தை அருளியுள்ளார். அதை உலக சுகத்துக்காக உபயோகிக்காமல் பிறரிடம் அன்பு செலுத்துவதற்கு உபயோகியுங்கள்.
* நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதே அளவு உங்களுக்கு கடவுளால் திருப்பித் தரப்படும்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement