E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இறைவனைக் காண்பது எப்படி?
ஆகஸ்ட் 05,2011,
08:08  IST
எழுத்தின் அளவு:

* புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி, நிற்கக் கற்றுக் கொள்வதற்கு முன்னால் தட்டுத்தடுமாறிப் பலமுறை கீழே விழுவதுபோல, இறையருளைப் பெறுவதில் வெற்றி காண்பதற்கு முன் அநேக தவறுகள் பலமுறை நேரும்.
* எறும்பு விடாமுயற்சியுடன் இரை இருக்குமிடத்தை அடைந்து, அதைக் கவ்விக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு கொண்டு சென்று உண்ணுகிறது. அதுபோல பக்தர்களும் இறைவனை விடாமுயற்சியுடன் வணங்கி, அவன் அருளைப் பெற வேண்டும்.
* பாலில் வெண்ணெய் இருக்கிறது என்று கத்தினால் வெண்ணெய் கிடைக்காது. அதை தயிராக்கிக் கடைய வேண்டும். "இறைவா! இறைவா!' என்று சொல்வதால் மட்டும் பலனில்லை. அவனைக் காண விரும்பினால் அதற்கேற்ற முயற்சிகளை செய்ய வேண்டும்.
* மீனைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தூண்டில்காரன், இரையை விடாமுயற்சியுடனும் பொறுமையுடனும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதுபோல, பொறுமையுடன் மார்க்கங்களைக் கடைபிடிக்கும் ஒருவன் இறைவனைக் காண்பது நிச்சயம்.
- ராமகிருஷ்ணர்

ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement