வீரமும் வேண்டும் அன்பும் வேண்டும்
ஆகஸ்ட் 10,2008,
10:24  IST
எழுத்தின் அளவு:

* நம்பிக்கையற்ற மனம் எப்போதும் சந்தேகிக் கவே செய்யும். காரணம் அது புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். நம் மனத்தின் மீது வேண்டுமானால் நமக்குச் சந்தேகம் இருக்கலாம். ஆனால், இறைவனின் வழி நடத்தலில் சந்தேகம் வேண்டாம்.* நாம் அன்பு செய்யலாம், இரக்கம் கொள்ள லாம், எந்த உணர்வையும் வெளிப்படுத்த லாம். ஆனால், இறைவனை தவிர வேறெந்த சக்திக்கும் அடிமையாகி விடக் கூடாது.* வீரத்தையும் அன்பையும் விட்டு விடாதீர்கள். உங்கள் ஆன்மாவை அழிவிலிருந்து காக்கக் கூடியது இந்த இரண்டு நற்குணங்களும் தான். இவற்றால் வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொள்ளுங்கள்.* முதியவர்களிடம் அனுபவம் இருந்தாலும், இளையவர்கள் அவர்களை வென்று விடுகின்றனர். காரணம் இளையவர்களிடம் உள்ள வேகமும், புதிய அறிவும் வெல்லப்பட முடியாதது. அதுவே பழசாகிறபோது தனது சிறப்பை இழந்து விடுகிறது.* சிலருக்கு அற்பங்கள் அற்புதமாகி விடுகின்றன. சிலருக்கோ அற்புதங்கள் அற்பமாக விடுகின்றன. அதுதான் புனிதர்களுக்கும், தலை சிறந்த புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.* நாம் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அப்போது வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். மரணத்தை வீழ்த்த நம்மால் முடியாது. ஆனால், வாழ்க்கையை உன்னதமாக்க முயன்றால் அது கைகூடுகிற காரியம்.

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement