இன்பமும் துன்பமும் சமமே!
டிசம்பர் 03,2007,
15:52  IST
எழுத்தின் அளவு:

* தராசின் ஒரு தட்டில் எடைக்கல்லை வைக்கும்போது அது கீழிறங்கியும், மற்றொரு தட்டு மேலேயும் உயர்கிறது. அந்த தட்டில் எடைக் கல்லுக்கு ஈடான பொருளை வைத்தால் இரண்டு தட்டுகளும் சமநிலை பெறுகிறது. வாழ்க்கையும் தராசு போன்றதுதான். இன்பம் போல மாயத்தோற்றமளிக்கும் துன்பத்தை பெறுவதற்காக, பல இன்பங்களை இழக்கின்றனர். இதனால், வாழ்க்கை சமநிலையின்றி இன்பமும், துன்பமுமாக மாறிமாறி பயணிக்கிறது. இன்ப, துன்பங்களை சமமாக எடுத்துக்கொள்ள மனதை இறைவனிடம் செலுத்த வேண்டும்.

*சூரியன் எல்லாருக்கும் ஒரே வெளிச்சத்தையும், வெப்பத்தையுமே தருகிறது. யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதைப்போலவே, நாமும் பாரபட்சம் பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். இத்தகையவர்களுக்கு உயர்ந்த குணங்கள் தாமாகவே அமைந்துவிடும். அவர்களது செயல்களும், பிறரது நன்மையை முன்னிலைப்படுத்துவதாக இருக்கும். இவர்களே இறைவனுக்கு பிடித்தமானவர்களாக இருக்கின்றனர். இறைவனது அருட்பார்வையும் எளிதில் இவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இறைவனின் அருளைப்பெற பாரபட்சம் இல்லாத தன்மை அவசியம்.

*உதவி செய்யும் குணத்தினால்தான் மனிதனுக்குள் உண்மையான இன்பம் பிறக்கிறது. நீங்கள் கஷ்டப்படும் ஒருவருக்கு செய்யும் சிறிய உதவி உங்களிடமே பல மடங்காக திரும்பி வந்து சேரும். இந்த உண்மையை புரிந்து கொண்டு ஈகை குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.


Advertisement
வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement