கருணையே கடவுள்
ஆகஸ்ட் 10,2008,
16:20  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே கருணை உணர்வு இருக்கிறது. ஆனால், அதனை வெளிப்படுத்துவதில் தான் வித்தியாசப்படுகின்றனர். கருணை என்பது பேராற்றல் வாய்ந்த ஒரு குணமாகும். அதில் அச்சம் என்பதற்கே இடமில்லை. துணிந்து செயல்படும் திறனுள்ளவர்கள் நிச்சயம் கருணை உள்ளவர்களாகவே இருப்பர். கடவுள் எங்கெங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் கருணையும் இருக்கிறது.* தயவு, கருணை இவ்விரண்டும் வெளியில் இருந்து பார்க்கும் போது, ஒன்றுபோல தோன்றினாலும், உண்மையில் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. கடவுளை உணர்ந்து, அவரிடம் தம்மை அர்ப்பணித்தவர்களிடம் இயல்பாகவே கருணை கொண்ட மனம் இருக்கும். அவரை அறியாதவர்களிடம் தயவு செய்யும் குணம் இருக்கும். யாரும் கட்டாயப்படுத்தாதபோது, தானாகவே வெளிப் படுவது கருணை. நிர்ப்பந்தங்களால் வெளிப்படும் குணம் தயவு. ஆகவே, மனதில் கருணையுடையவர்களாக இருப்பதே சிறந்தது.* மனதில் சத்திய உணர்வுடன் இருங்கள். அதனை முழுமையாக அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்கு முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த உணர்வை உங்கள் அளவில் மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள். எதிரியும், அதன் தன்மையை தெரிந்து கொள்ளும்படியாக வெளிக் காட்டுங்கள். அப்போதுதான் அவர்களது மனதிலும் சத்திய உணர்வு வரும். சத்தியத்தின் ஒப்பற்ற தன்மையால், அவர்கள் உங் களுடன் நட்பு கொண்டுவிடுவார்கள். அத்தகைய ஆற்றல் சத்தியத் திற்கு உண்டு.

 

Advertisement
வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement