நன்மை தரும் மனஉறுதி
ஆகஸ்ட் 10,2011,
10:08  IST
எழுத்தின் அளவு:

* கடவுளின் செயலுக்காக மவுனமாகக் காத்திருங்கள். நமக்கு மீட்பு அவரிடம்இருந்தே கிடைக்கும்.
* அனைத்து உயிரினங்களின் கண்களும் உங்களையே நோக்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே வாழ்க்கையில் எப்போதும் கவனமாக இருங்கள்.
* மன உறுதியால் நன்மை விளையும். நன்மைகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.
* கிடைக்காத ஒன்றுக்காக தளராத மனதோடு காத்திருப்பது போல், ஆண்டவருக்காகவும் காத்திருங்கள்.
* எளிய மனத்தவர்களை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நாம் தாழ்த்தப்படும் போது நமக்கு மீட்பளிப்பார்.
* தற்பெருமை பிடித்தவர்களை, ஆண்டவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.
* உங்களை இகழ்பவர்களுக்காகவும், கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement