பிறவிப்பயன் அடைய வழி
ஆகஸ்ட் 10,2008,
16:32  IST
எழுத்தின் அளவு:

தனித்திருக்கும் ஒன்றாகத் தோன்றினாலும், சூஅலை' என்ற தனிப்பெயரைப் பெற்றிருந் தாலும், அலையானது, கடலை ஆதாரமாகக் கொண்டு, பிரிக்க முடியாதபடி செயல்பட்டு, மீண்டும் கடலையே அடைகிறது. இதைப் போலத்தான் மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது. இன்பம் வரும்போது சிரிக்கிறார் கள், சிறிய துன்பத்திற்கு கூட கலங்குகிறார்கள், புரியாத சில கேள்விகளுக்கு விடை தேடி அங்கும் இங்குமாக அலைகிறார்கள்.இறுதியில் எதுவுமே புலப்படாமல் வந்த இடத்திற்கே சென்று விடுகிறார்கள். உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளும் இறுதிக்காலத்தில் பரமானந்தமாகிய இறைவனைத்தான் அடைகின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இறைவன் மீது நாட்டம் செலுத்துங்கள். அதுதான் பிறவிப்பயன் அடைய வைக்கும் வழியாகும்.அறிவுமயமான இறைவன் எந்த இடத்திலும் இருக்கிறார். அனைத்திற்கும் தொடக்கமாகவும், இறுதியாகவும் இருக்கும் அவர், உங்களை எந்த நேரத்திலும் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் தான் உங்களது அறியாமையால் அதனை உணராமல் இருக்கிறீர்கள். அத்தகையவரை அடைய வேண்டுமென நினைப்பவர்கள் பக்தி ஒன்றைத்தவிர வேறெதையும் செய்ய வேண்டாம். அவரைத்தேடி வெளியில் அலைய வேண்டும், அவரோடு பேச வேண்டும் என மிகச்சிறிய வேலையைக்கூட செய்யத் தேவையில்லை. அமைதியாக இருந்தாலே போதும். ஏனென்றால் அமைதி மட்டுமே உண்மையாகும். இந்த உண்மையை உணருபவர்கள் இறைவனை அடைவது நிச்சயம்.

Advertisement
சித்தானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement