இறைவனுக்கு நன்றி சொல்வோம்
ஆகஸ்ட் 14,2011,
09:08  IST
எழுத்தின் அளவு:

* தொண்டு செய்ததை பிறர் அறிய வேண்டும் என்பதற்காக தற்பெருமையை வளர்த்துக் கொள்ளக்கூடாது. அடக்கமாக இருக்க வேண்டும். பிறருக்கு தொண்டாற்ற வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
* கடந்து போன வசந்தம், இளமை இவையெல்லாம் போனால் போனது தான். வாழ்க்கை ஒரே திசையில் மட்டும் செல்லும் நீரோட்டம் என்பதால், அதைப் பயனுள்ள வகையில் நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
* மனித இதயத்தில் கோபத்தீ, பாசத்தீ, ஆசைத்தீ இப்படி பல விதமான நெருப்புகள் கனன்று கொண்டு இருக்கின்றன. அவற்றை வளர விடக்கூடாது. வளரவிட்டால் நம்மை அழித்துவிடும்.
* தூய்மையற்ற சிந்தனைகளை படித்தால், அசுத்தமான எண்ணங்கள் மனக்கண்ணாடியின் வழியே இதயத்திரையில் படிந்து விடும். ஆகையால் நல்ல திசையில் மனதைத் திருப்ப நல்லதை செய்ய வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement