உரிய நேரத்தில் தொழுவோம்
ஆகஸ்ட் 14,2011,
09:08  IST
எழுத்தின் அளவு:

* தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். ரமலான் காலத்தில், எவ்வளவு தான் நோன்பில் அதிக அக்கறை காட்டினாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு தொழுகையை நிறைவேற்றாமல் போனால் அந்த நோன்பின் பயன் முழுமையாக கிடைக்காது. எனவே உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுங்கள்.
* தொழுபவர் அல்லாஹ்விடம் நேரடியாக பேசுகிறார். இகாமத்தை நீங்கள் செவியுற்றால் தொழுவதற்கு நடந்து வாருங்கள்.
* தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படும். பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். தொழுகையின் முன்வரிசையின் சிறப்பை அறிந்தால் நிச்சயமாக நீங்கள் (அதற்காக) சீட்டுக்குலுக்கி முந்திக்கொள்ள முனைவீர்கள்.
* அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்). நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஸஜதாவைக் கொண்டும் உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்துகிறான்.
- குர்ஆன்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement