என்றும் உண்மையே பேசுங்கள்
ஆகஸ்ட் 10,2008,
16:43  IST
எழுத்தின் அளவு:

* எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். அப்பொழுதுதான் உண்மையின் ரூபமாகிய இறைவனை காண முடியும். இறைவனிடம் உள்ளப் பூர்வமான பக்தி கொள்ள வேண்டும். அலுவலகத்திலும், வியாபாரத்திலும் உண்மை நெறி தவறக்கூடாது. கபட வேஷத்தையும், ஏமாற்றுவதையும் விட்டுவிட்டு உண்மையே பேசினால் கடவுளைக் காணலாம்.
* ஒரு மனிதனுக்குக் கடன் அதிகமாகிவிட்டது, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போல் நடிக்க ஆரம்பித்துவிட்டான். வைத்தியனால் குணமும் அடையவில்லை. கடைசியில் கெட்டிக்கார வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டான். அந்த போலிப் பைத்தியத்தைத் தனியாக அழைத்துச் சென்று "அடேய்! நீ என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்! பைத்தியமாக நடித்துக் கொண்டிருந்தால், உண்மையாகவே உனக்குப் பைத்தியம் பிடித்து விடும். இப்பொழுது உன்னிடம் பைத்தியத்திற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஜாக்கிரதையாக இரு!" என்று எச்சரித்தான். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்துபோய் பைத்தியமாக நடிப்பதை விட்டுவிட்டான். எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே ஆகவேண்டும்.
* பொய், அனைத்தையும் விட கெட்டது. பொய் வேஷம் போடுவதும் கெட்டதே. ஒருவன் பொய் பேசுவதில் விருப்பம் கொண்டால், பொய்யின் மேலுள்ள பயம் அவனுக்குப் போய்விடும். வாய்மையே வெல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement