பறவைகளைப் பாருங்கள்
ஆகஸ்ட் 21,2011,
09:08  IST
எழுத்தின் அளவு:

* நீ ஜெபம் செய்யும் போது உன் வீட்டினுள் சென்று கதவை தாழிட்டு பிதாவை நோக்கி பிரார்த்தனை செய். உன் உள்ளத்தை காண்கிற கடவுள் உன் வேண்டுதலை நிறைவேற்றி பலனளிப்பார்.
* பிறர் உன்னைக் கண்டு புகழ வேண்டும் என்பதற்காக தான தர்மத்தை செய்யாதே; அதைப்பற்றி எச்சரிக்கையாய் இரு. இல்லையேல், பரலோக தந்தையிடம் உன் புகழ்பாடும் தர்மத்திற்கு பலனில்லை.
* வானத்தில் பறக்கும் வண்ணமிகு பறவைகளைப் பாருங்கள், அவைகள் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை. களஞ்சியங்களும் அவைகளுக்கு இல்லை. அவைகளையும் உங்கள் பரமதந்தை பிழைப்பூட்டி ஆதரிக்கிறாரே, அப்பறவைகளை விட நீங்கள் பெரும் சிறப்பு பெற்றோர் அல்லரோ?
* நீங்கள் மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று கூறாதீர்கள். ஏனெனில் நீங்கள் மற்றவர்களைக் கூறுவதுபடியே உங்களை ஆக்கிக் கொள்வீர்கள். எப்படி எனில் நீங்கள் பிறருக்கு அளக்கின்ற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement