கண் மூடி...கடவுளைத்தேடி...!
ஆகஸ்ட் 21,2011,
09:08  IST
எழுத்தின் அளவு:

* இயற்கையின் அழகில் இறைவனைக் காண்பது போல், மனிதனுக்குரிய அன்பு, துறவு, சீலம், நம்பிக்கை இவற்றிலும் அவனைக் காணுங்கள்.
* கடவுள் சூரியனைப் போன்றவர். அகங்காரம் என்னும் மேகம், நம் இதய கமலத்தை மறைக்காத போது, அதன் மீது அவரது அருள் என்னும் கிரணங்கள் விழுந்து அதை மலரச்செய்கிறது.
* ஒவ்வொரு அணுவிலும் இறைவன் நிறைந்து இருக்கிறான், அவன் இல்லாமல், மனிதனால் உயிர்வாழவே முடியாது. உலகமே அவனைக் காண விழைகிறது.
* கடவுள் அனைத்து இடத்திலும் இருக்கிறார். உன் இதயத்தில் எப்போதும் இருக்கிறார். அவரை அங்கே கண்டுகொள்.
* மூன்று கண்களையும் மூடி வைத்திருக்கும் தேங்காய் இறைவனைக்காண கோயிலுக்கு செல்கிறது. இரண்டு கண்களை திறந்து வைத்துக் கொண்டிருக்கும் நாம் இறைவனைக் காண கோயிலுக்கு செல்வதில்லை என்ற நிலையை மாற்ற வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement