பக்தியும் ரோஜா செடியும்
ஆகஸ்ட் 10,2008,
17:03  IST
எழுத்தின் அளவு:

ரோஜா செடியில் இலை, முள், கிளை, பூ என்று இருக்கிறது. பூவை இனங்கண்டு, அதில் கவனத்தைச் செலுத்தி, முள்ளில் கை படாமல், இலை உதிராமல் மிகுந்த கவனத்துடன் மனதை ஒருமுகப்படுத்தி பூவைப் பறிக்கலாம். பூவைப் பறித்த பிறகு, கையிலுள்ள பூவுக்கும், செடியிலுள்ள முள், இலை, கிளைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்படி செடியின் மற்றப் பகுதியிலிருந்து ஒருமுகப்பட்ட மனதுடன் பூ பிரிக்கப்படுவது போல தியானம்' அமைய வேண்டும்.அந்தப்பூவை கடவுளுக்கு அர்ப்பணித்த பிறகு, செடி, கிளை, உன் கரம், ஏன் பூவும்கூட இல்லவே இல்லை. அப்போது மிஞ்சியிருப்பவர் கடவுள் மட்டுமே. இப்படியாக, மற்றவை மறக்கப்பட்டு கடவுள் மட்டுமே இருக்கும் நிலையே உயர்பக்தி.காட்டில் ஒரு சிறு மரக்கட்டையில் தீ வைக்கிறாய். காடுமுழுவதும் தீப்பற்றும் வரை அக்கட்டை தனது குணத்தை விடாது. தீய இயல்புகள் அத்தகைய காட்டுத்தீ போன்றவை. தீயவர்கள் தம்மையும் அழித்துக் கொண்டு தம்மைச் சுற்றி இருப்பவரையும் அழித்து விடுவர். அவர்கள் தங்கள் தீய பண்புகளைச் சுற்றிலும் செலுத்திப் பரவச் செய்து நண்பர்களையும் உறவினர்களையும் நாசமுறச் செய்கின்றர்.இயந்திரம் போல ஒரு வேலையைச் செய்வது எண்ணெய் வற்றிய திரியின் சுடரைப் போலத்தான் இருக்கும். மன எழுச்சியே எண்ணெய். அதை உன் செயல்பாட்டுக்குள் ஊற்று. சுடர் தெளிவாகவும், நீண்ட நேரமும் எரியும். எழுச்சியுடன் செய்யப்படும் வேலைகளே வெற்றியைத் தரும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement