நன்னடத்தையே ஆன்மிகத்தின் அடிப்படை
ஆகஸ்ட் 10,2008,
17:32  IST
எழுத்தின் அளவு:

 நீங்கள் கேள்விகளைக் கேட்பதற்கு முன், கடமைகளை செய்ய கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், கடமைகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது, நாம் பொதுவாக எழுப்பும் கேள்வி சூஎதற்காக?' என்பதுதான். சூஏன்?' என்ற கேள்வியை எழுப்புவது எளிது. ஆனால், கடமையைச் செய்தாக வேண்டும் என்ற தர்மத்தின் அடிப்படையை மறந்து விடுகிறோம் என்பதே நிஜம்.நமக்கு விருப்பமானவற்றை மட்டுமே செய்கிறோம், விருப்பமில்லாதவற்றை செய்வதில்லை. எனவே, நம்முடைய ப குத்தறியும் ஆற்றல் குறையுள்ளதாக மாறுகிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் சோதனைகள் எழும்பொழுது சரியான முடிவுகளை எடுக்கவும், திருத்தமாக செயல்படவும், நம்மால் முடிவதில்லை. இதற்கு காரணம், தர்மத்திற்கு ஏற்ற வகையில் வாழ நாம் என்றுமே முயலாதது தான். மாறாக நம்முடைய சொந்த சபலங்களுக்கு அடிமைப்பட்டு மனம் போனபடி நாம் வாழ்கிறோம். சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை திறந்த மனத்துடன் படித்து, அவற்றிற்கு கீழ்ப்படிந்து நடக்க முதலில் கற்றோமானால், நம் மனம் நாளடைவில் தூய்மையடையும், அப்பொழுது, தர்மத்தின் கோட்பாடுகளை நாம் புரிந்து கொள்வோம். ஆன்மிக வாழ்க்கைக்கு நன்னடத்தை மிகவும் அவசியமான ஒன்று. நீங்கள் பலவித சடங்குகளை செய்திருக்கலாம், ஆலயங்கள் பல எழுப்பியிருக்கலாம், அல்லது ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியிருக்கலாம். ஆயினும் நடத்தை முறையற்றதாக இருப்பின், இவற்றால் பயனில்லை.

Advertisement
தேஜோமயானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement