விடாமுயற்சி செல்வம் தரும்
ஆகஸ்ட் 31,2011,
09:08  IST
எழுத்தின் அளவு:

* சிறிய பொறுப்புகளில் நம்பிக்கையாய் இருந்தால் பெரிய பொறுப்புகளில் தானாகவே உம்மை அமர்த்துவேன்.
* ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் எப்போதும் அதிகமாகச் செய்யுங்கள்.
* விடா முயற்சி உடையவர்களின் கைகள் செல்வத்தை உண்டாக்கும்.
* உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர். கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்.
* தூங்கிக் கொண்டே இருப்பதை நாடாதே! கண் விழித்திரு. உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.
* உங்கள் எதிரிகளைச் சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
* நெற்றி வியர்வை நிலத்தில் விழும் வரை உழைத்து உன் உணவை உண்பாய். உன் கடவுளாகிய ஆண்டவர், உன்நிலத்தின் விளைச்சல்களுக்கும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement