Advertisement
பழங்களை விரும்பி சாப்பிடுங்கள்
செப்டம்பர் 04,2011,
09:09  IST

* வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. காலம் விரைந்து சென்று கொண்டிருக்கிறது.
அதனால் உணவைத் தேடி அலைவதோடு கடவுளைத் தேடும் பணியிலும் ஈடுபடுங்கள்.
* பேராசையுள்ள மனிதன் எதனாலும் திருப்தி அடைவதில்லை. எதையோ பறிகொடுத்தது போல துக்கத்திலேயே காலத்தைக் கழிக்கிறான். மன திருப்தியை விட மகிழ்ச்சியானது உலகில் வேறில்லை.
* அனைத்து ஆசைகளையும் இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள். மனதை சமநிலையில் வைக்க பழ உணவுகளையே விரும்பி சாப்பிடுங்கள். யாராவது உங்களைத் திட்டவோ, அடிக்கவோ முற்படும் போது அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
* இறை நிலையை அடைய ஒரே வழி பக்தி மட்டுமே. உலகில் இருக்கும் அனைத்து தீமைகளில் இருந்து விடுவிப்பதும் அது தான். உண்மையை அறிந்து கொள்ள உதவும் ஒரே வழியும் அதுவே.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement