நற்குணம் நன்மை தரும்
செப்டம்பர் 04,2011,
09:09  IST
எழுத்தின் அளவு:

* உன்வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழிகாட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீர்.
* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட உங்களில் நிகழ்ந்த பாவங்களை சிந்தியுங்கள்.
* நீங்கள் உயிருடன் வாழப்போவதை சிந்திப்பதை விட (வருகின்ற) மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
* உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் பாவங்களைக் கரைத்துவிடும்; கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களை கெடுத்துவிடும்.
* ஒருவன் ஒரு நன்மை செய்ய எண்ணி அதை அவன் செய்யவில்லையானால் அல்லாஹ் அதற்கு ஒரு நன்மையை பதிவு செய்கின்றான். நன்மை செய்ய எண்ணி அதை செய்தால் பத்து நன்மை முதல் எழுநூறு மடங்கு வரை அதையும் விட பல மடங்கு எழுதுகிறான்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement