கடவுளை அடைய மூன்று வழிகள்
ஆகஸ்ட் 19,2008,
19:09  IST
எழுத்தின் அளவு:

வாழ்வு என்னும் கடலில் வேகமாக முன்னேற விரும்பினால் செய்ய வேண்டியது ஒன்றே. உங்கள் மனப்படகின் பாயை விரித்து விடுங்கள். ஆண்டவனுடைய அருட்காற்று இரவுபகலாக உங்களின் தலைக்கு மேல் வீசும்.இறைவனிடம் தன் மனதை ஒப்படைத்தவன் தீய எண்ணம் படைத்தவர்களுடன் இருந்தாலும் எந்தவிதமான தீமையையும் அடைய மாட்டான்.மனிதன் இறைவனை எங்கு தேடியும் காணாமல் அலைகிறான். அதை அறிந்து கொள்ளாது அவன் உலகெல்லாம் தேடி அலைந்து திரிகிறான். அவன் தேடும் இறைவன் அவன் உள்ளத்திலேயே வீற்றிருப்பதை உணராமல் தவிக்கிறான்.வேக வைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது முளைப்பதில்லை. அதுபோல, உண்மை ஞானம் என்னும் நெருப்பினில் புடமிட்ட உயிர்கள் மீண்டும் மண்ணுலகம் வருவதில்லை. ஆனால், அஞ்ஞானம் கொண்டு அலையும் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன.இல்லறத்தில் இருப்போர் உயிர்களிடத்தில் அன்பு, எளியவர்களுக்குச் சேவை, கடவுளின் திருநாமத்தில் பக்தி இவற்றை தவறாது பின்பற்றி வந்தாலே கடவுளை அடைய முடியும்.தன் உண்மைத் தன்மையை மறைத்து வெறும் வேஷம் போடுபவனும் , எதிலும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி சுயலாப நோக்கத்தோடு செயல் புரிபவனும், பிறருக்கு அநீதி இழைப்பவனும், ஒழுக்கநெறி தவறுபவனும் என்றைக்கும் கடவுளை அடைய முடியாது.

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement