விரலால் கூட தீண்டாதீர்கள்
செப்டம்பர் 09,2011,
10:09  IST
எழுத்தின் அளவு:

* ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடியிருக்கிறேன், காய்கறி உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன் என்று
நீ சொல்வதனால் ஆன்மிகவாதியாகிவிட மாட்டாய். இதெல்லாம் உன் பெருமையை பறைசாற்றவே உதவும்.
* ஆயுள் முழுவதும் நல்ல நூல்களைப் படிப்பதாலும், பேரறிஞர் ஆவதாலும் ஒருவன் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது. சொற்பொழிவு நிகழ்த்தி கூட்டம் சேர்ப்பதும் ஆன்மிகப் பேற்றை அடைய உதவாது. அன்பின் மூலமாகத் தான் ஆன்மிக உணர்வைப் பெற முடியும். அன்பிற்கே அத்தகைய வலிமை இருக்கிறது.
* மனதையும் உடலையும் பலவீனப்படுத்தும் எந்தப் பொருளையும் உன் விரலால் கூட தீண்டக்கூடாது. அதற்குரிய பக்குவத்தை நீ பெற்றால் தான் ஆன்மிகத்தின் நுனியிலாவது கால் வைக்க முடியும்.
* ஆன்மிக உணர்வைப் பெறாத வரை நம் நாடு நிச்சயமாக மறுமலர்ச்சி அடையாது. நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, ஆன்மிக வழிகளை பின்பற்றி நடக்க உறுதியெடுக்க வேண்டும்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement