உங்களின் முதல்வேலை
செப்டம்பர் 15,2011,
08:09  IST
எழுத்தின் அளவு:

* பிள்ளையின் செயலைக் கண்டு எந்தத் தாயும் கண்ணீர் சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது உங்களுக்கு நல்லதல்ல. அதன் காரணமாக நீங்கள் எதிர்காலத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
* நம்பிக்கை அற்புதங்களைச் செய்யும். கடவுள் எதைக் கொடுப்பார் என நீ நம்புகிறாயோ அது ஒருநாள் உன்னிடம் வந்தே தீரும். ஒரு செயலைத் தொடங்கும் முன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்களிடமே
நம்பிக்கையூட்டிக் கொள்வது தான்.
* மனிதனுக்குச் செய்யும் தொண்டு கடவுள் பக்தியை விட மேலானது. கடவுளுக்கு உன்னால் ஆக வேண்டிய தேவை எதுவுமில்லை. மனிதனுக்குச் சேவை செய்பவன் கடவுளை மகிழ்ச்சிப்படுத்தியவன் ஆவான்.
* இரவில் குளிர் அதிகரிக்கும்போது உன்னைச் சுற்றி இழுத்துப் போர்த்திக் கொள்ளுகிறாய். அதுபோலத் துன்பம் உன்னைத் தாக்கும்போது உன் மனதைச் சுற்றிக் கடவுள் திருநாமத்தின் கதகதப்பை அமைத்துக் கொள்வாயாக.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement