பாரபட்சம் காட்டாதீர்கள்
செப்டம்பர் 15,2011,
08:09  IST
எழுத்தின் அளவு:

* நம்பிக்கை, உற்சாகம் முதலிய நற்குணங்களுக்கு மட்டுமே மனம் கட்டுப்படும்.
* நோய் தீர்வதற்கும், வலிமை பெறுவதற்கும் உறுதியான நம்பிக்கை வேண்டும்.
* எப்போதும் நல்லதையே செய்ய வேண்டும் என எண்ணுங்கள். அவ்வாறு நினைப்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொள்ளுங்கள், நல்லதைச் செய்கிறேன் என்ற பெயரில், ஒரு செயலை இழுத்தடிக்கக் கூடாது.
* பெண்களைத் தாழ்வாகவும், ஆண்களை மேலாகவும் கருதி நடத்துதல் கூடாது. இவ்வாறு நடப்பது மாபெரும் தவறாகும். பாரபட்சம் கொண்டு நடக்கும் இத்தன்மையே துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கிறது.
* எந்த சக்தியையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை ஒற்றுமைக்கு இருக்கிறது. ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும், நன்மையும் பெற்றவனாகிறான். தனித்து செல்வதைவிட, ஒற்றுமையாக சென்றால் அதற்கு கிடைக்கும் மதிப்பு அதிகம்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement