அன்பை வெளிப்படுத்துங்கள்
செப்டம்பர் 13,2011,
16:09  IST
எழுத்தின் அளவு:

* நாவையும் உதட்டையும் கட்டுப்படுத்த வேண்டும். நாவை பொல்லாப்புக்கும் உதடுகளை கபடத்திலிருந்தும் விலக்கிக் கொள்ள வேண்டும்.
* நீ மற்றவனைச் சுத்திகரிக்க முற்படுமுன் உன்னைச் சுத்திகரித்துக் கொள். பின்னர் மற்றவன் சுத்திகரிக்கப்பட உதவி செய்.
* உனது பாவத்தை முதலில் பார். அப்போது மற்றவர்களின் பாவம் உன் கண்ணுக்குத் தெரியாது மறைந்துவிடும். மற்றவர்களை நியாயம் தீர்க்க நீ யார்?
* குற்றப்படுத்துதல் தயவு இன்மையை வெளிப்படுத்துகிறது. மனம் உருக்கமுள்ளவர்களாயும், மன்னிப்பவர்களாயும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
* இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே மனிதன் உள்ளான். ஒருவனது இருதயமே அவனது குணத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, நினைவுகளைச் சுத்தம் செய்தல் அவசியமாகும்.
* அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அன்பை செயல் மூலம் வெளிப்படுத்துங்கள்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement