எந்தப்பணியும் நல்ல பணியே!
டிசம்பர் 03,2007,
17:49  IST
எழுத்தின் அளவு:* மனதை ஒருமுகப்படுத்தி கண்களை மூடி, அம்பிகையின் திருநாமத்தை உச்சரியுங்கள். அப்போது அவளது உருவம் உங்களுக்கு தெரியும். அவ்வாறு உருவம் தெரியாவிட்டால் அவள் எதிரே நிற்பதாக எண்ணிக்கொண்டு, `அம்மா!' என்று ஆசையுடனும், மனதில் பக்தியுடனும் அழையுங்கள். உங்களது குரலுக்கு அம்பிகை நிச்சயம் காட்சி தருவாள். `அம்மா' எனும் வார்த்தைக்கு `நிலையான அன்பே, நிலையான கருணையே, நீ என்னை வழி நடத்துவாயாக!' என்று பொருள்.

* இறைவன் உள்ளத்தில் இருக்கும்போது, எதற்காக சத்தமிட்டு வணங்க வேண்டும் என்பர் சிலர். இறைவன் உள்ளத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், உங்களது உள்ளமோ உங்களிடம் இல்லாமல் வெளியில் வேறு பொருளை அல்லவா தேடிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை உங்களிடமே திருப்பி கொண்டு வருவதே பிரார்த்தனை.

* படித்துவிட்டு வேலையில்லாத பலர், போதைப்பொருளுக்கு அடிமையாகி உடலையும், மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால், குடும்பச்சுமை அதிகரிக்குமே தவிர, வேலை கிடைக்காது. ஆகவே, கிடைக்கும் வேலையை சுயகவுரவம் பார்க்காமல் செய்யுங்கள். தீய வழியில் செல்லாமல், சுயமாக உழைத்து செய்யும் எந்த வேலையும் நல்ல வேலையே.

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement