மாமியார் மருமகள் ஒற்றுமை
செப்டம்பர் 20,2011,
10:09  IST
எழுத்தின் அளவு:

* குழந்தைகளிடம் அன்பு காட்டுவது போல, நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுங்கள். தூய்மை, அடக்கம், பெரியவர்களை மதித்தல் ஆகிய குணங்களை அவர்கள் மனதில் விதையுங்கள்.
* அன்றாடப் பணிகளைத் தொடங்கும் முன் பெற்றோரை வணங்குவதை முதல் கடமையாகக் கொள்ளவேண்டும். இப்பழக்கத்தை இளமையில் இருந்தே பின்பற்றுங்கள்.
* வெறுப்பு, பேராசை, கோபம், கவலை, கர்வம் ஆகிய குணங்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடியவை. இவற்றின் பக்கம் செல்லாத வகையில் கண்காணிப்புடன் செயல்படுங்கள்.
* பட்ஜெட்டை மட்டும் சரிக்கட்டினால் போதாது. மாமியாரும், மருமகளும் அனைத்து விஷயங்களிலும் ஒத்துப்போகும் கலையை கற்றுவிட்டால் குடும்பம் அமைதிப் பூங்காவாக மாறிவிடும்.
* ஒருநாடு எந்த அளவு முன்னேற்றம் பெற்றுள்ளது என்பதை அங்குள்ள பெண்களின் நிலையைக் கொண்டு தான் கணக்கிட வேண்டும். பெண்களின் நிலை உயர்ந்து விட்டால் வீடும், நாடும் முன்னேறி விடும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement