இறைவன் மட்டுமே உதவுவான்
செப்டம்பர் 20,2011,
10:09  IST
எழுத்தின் அளவு:

* இறைவனைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்.
* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. நாம் எந்த பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
* இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது. மேலும், உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே, வாய்மையான இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவனை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.
* இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே.
- இஸ்லாம் பொன்மொழிகள்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement