கட்டுப்பாடற்ற சுதந்திரம் கூடாது!
ஆகஸ்ட் 21,2008,
08:53  IST
எழுத்தின் அளவு:

* பெண்கள் ஆண்களைப் போல் படிக்கலாம். திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.ஆனால், பெண்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பது நல்லதல்ல. அது அவர்களுக்கு கெடுதலையே உண்டாக்கும்.* சமுதாயத்தில் பொதுவாழ்வில் பெண்கள் ஈடுபடும்போது ஆத்ம தர்மம் என்ற குறிக்கோளை மறக்கக்கூடாது. படிப்பு என்பது விவேகத்தையும், நன்மைகளை பகுத்தறியும் அறிவையும் கொடுப்பதாக அமைய வேண்டும். பழங்காலத்தில் நன்குபடித்த பெண்கள் இருந்திருக்கின்றனர். அப்பெண்களைப் போல, தற்கால பெண்களும் தமக்குரிய தர்மநெறிமுறைகளை மீறாமல் ஒழுக்கத்தைக் கண்ணாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
* நல்ல ஒழுக்கம் என்ற அடிப்படையை நம்பியே எதிர்கால சமுதாயம் இருக்கிறது என்பதை பெண்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அனுசூயா, சாவித்திரி, நளாயினி போன்ற பெண் மணிகள் அறிவில் சிறந்தவர்களாகவும், கற்புநெறி தவறாதவர்களாகவும் வாழ்ந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர்.
* பெண்கள் நவீனகால நுட்பமான அறிவியல் அறிவினைப் பெற்றாலும், நம் நாட்டின் அடிப்படையான ஆன்மிக சிந்தனைகளைப் பாதுகாக்கும் பெட்டகங்களாகவும் இருக்க வேண்டும். எப்போதும் அகத்தூய்மையையும், உள்ளுணர்வையும், கண்ணோட்டத்தையும் பாதுகாக்கவேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement