கல்வியின் நோக்கம் என்ன?
செப்டம்பர் 25,2011,
10:09  IST
எழுத்தின் அளவு:

* கற்றுக் கொடுப்பவரும், கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்க வேண்டும். இந்த நிலை அற்றவர்களிடம் நல்வழி இருக்காது.
* கல்வி கற்பதைவிட்டு விடுவதும், பொருள்களை சேர்ப்பதில் முழு நேரத்தையும் செலவு செய்வதும் மக்களை நாசப்படுத்தும் இரண்டு வஸ்துகளாகும்.
* கல்விக்காக தன் உயிரை விட்டவர் மரணிப்பதில்லை. கல்வி கற்றுத்தந்தவர் மரணித்த பின்னும், அவரது நற்செயலின் கூலி அவரைச் சென்றடைகிறது.
* கல்வியில் ஒரு சந்தேகம் ஏற்பட்டால் அதுபற்றி தெரிந்தவரிடம் கேட்கலாம். அவர் அதைச் சொல்ல மறுத்தாலோ, மறைத்தாலோ, மறுமை நாளில் நெருப்பால் ஆன கடிவாளத்தைக் கொண்டு கண்களில் கடிவாளமிடப்படுவார்.
* மக்களை தன் பக்கம் இழுக்கும் நோக்கத்திற்காக மட்டும் ஒருவன் கல்வி கற்பானாயின், அவனை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான்.
* ஒருவன் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால், அந்தப்பாதையை அல்லாஹ் சொர்க்கப்பாதையாக ஆக்குகிறான்.
- இஸ்லாம் பொன்மொழிகள்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement