தேவையான மூன்று குணங்கள்
அக்டோபர் 04,2011,
14:10  IST
எழுத்தின் அளவு:

* எப்போதும் நல்லதையே செய்ய வேண்டும் என நினையுங்கள். நல்லதை நினைப்பவர் இறைவன் அருகில் இருக்கிறார்.
* ஒற்றுமைக்கு எந்த சக்தியையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை இருக்கிறது. எனவே, பிரிந்து வாழாமல், ஒற்றுமையான வாழ்க்கை மட்டும் வாழுங்கள்.
* மனஉறுதி, நம்பிக்கை, உற்சாகம் ஆகிய குணங்கள் நோய்கள் தீரவும், உடல் வலிமை பெறவும் உதவும்.
* பாரபட்சம் பார்க்கும் தன்மையே துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படையாகவும், அநீதிகளின் பிறப்பிடமாகவும் இருக்கிறது. என்பதால் பாரபட்சத்தை தவிர்ப்பது நல்லது.
* மனிதர்களுக்கு கொடிய பகைவர்கள் இருவர், அவர்களே கவலை மற்றும் பயம் என்பவர்கள். இவ்விரண்டு குணங்களும் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
* மனதில் தோன்றும் எண்ணங்களே செயலாக வெளிப்படுகிறது. எண்ணம் நல்லதாக இருந்தால் நற்செயலாகவும், தீயதாக இருந்தால் தீயசெயலையும் ஏற்படுத்தும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement