இதுவும் ஒரு அறச்செயலே!
அக்டோபர் 10,2011,
09:10  IST
எழுத்தின் அளவு:

* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.
* இறைதிருப்தியைப் பெறும் நோக்குடன் மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவிடுவதையும், ஓர் அறச்செயலாகவே இறைவன் காண்கின்றான்.
* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாகச் செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கின்றான்.
* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச்செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ அது பாவச்செயலாகும்.
* வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள்.
* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement