உழைத்து வாழ வேண்டும்
அக்டோபர் 10,2011,
09:10  IST
எழுத்தின் அளவு:

* சிற்றலைகளும் பேரலைகளும் என் மீது புரண்டோடுகின்றன. நாள்தோறும் கடவுள் தம் பேரன்பைப் பொழிகின்றார்.
* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்கு செவிசாயுங்கள். மெய்யுணர்வை அடையும் படி அதில் கவனம்
செலுத்துங்கள்.
* உங்கள் சார்பாக கடவுள் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள். எனவே அஞ்சாமலும் நிலை குலையாமலும் இருங்கள்.
* எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.
* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க வேண்டும்.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு< உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement