துன்பங்கள் நிஜத்தில் துரும்புகள்
ஆகஸ்ட் 28,2008,
19:30  IST
எழுத்தின் அளவு:

பொறுமை ஒவ்வொருவருக்கும் அவசியமான குணம். ஒருவனுக்கு எவ்வளவு பொறு மை குறைகிறதோ, அவன் அவ்வளவு இழப்புகளை கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டும். அவன் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி காணவே முடியாது.பொறுமை உள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம். பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் இறைபக்தியிலும் ஈடுபட முடியாது. இறைவன் அருள் வேண்டுபவர்கள் முதலில் இக்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் செய்யும் செயலுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்ப அடுத்த பிறப்பை எடுக்கின்றனர். ஆகவே, எந்த சூழ்நிலையிலும் எண்ணங்கள் நல்லவையாக இருப்பது அவசியம்.உங்களது இன்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தீய செயல்களைச் செய்யாதீர்கள். இவர்கள் மறுபிறப்பில் இல்லாவிட்டாலும், இந்த பிறப்பிலேயே மற்றவர்களைவிட தாழ்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவராக இல்லாமலும் திகழ்வர். இத்தகைய பிறப்பெடுத்து ஒரு பயனும் இல்லை.
தைரியத்துடன் இருங்கள். எந்த துன்பத்திற்கும் கலங்காதீர்கள். அவற்றால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. பிரச்னையை நேரே பார்க்கும்போது, பெரிய துன்பம் போல தெரியும். ஆனால், உண்மையில் அது ஒன்றுமில்லாத சிறிய துரும்பாகவே இருக்கும். எனவே, பயப்படுவது தேவையற்றது. மனதில் தைரியம் இல்லாதவர் ஆண்தன்மை இல்லாதவர் ஆவர். இவர்கள் மறுபிறப்பில் புழுக்களாகவே பிறப்பார்கள்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement