Advertisement
இதயத்தில் இருக்கும் இறைவன்
அக்டோபர் 14,2011,
16:10  IST

* கடவுளிடம் "அதைக்கொடு, இதைக் கொடு' என்று கேட்க வேண்டியதில்லை. கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.
* நல்ல செயல்களைச் செய்தால் ஆன்மிகப் பாதையில் மனம் திரும்புவதுடன் இறைவனின் அருளையும் பெறும் தகுதி ஏற்படும். முற்பிறவிப் பயன்கள் நம்மை வருத்தாது.
* நாக்கு ஓய்வு பெற்றால் மூளையின் சக்தி வலுப்பெறும். இந்த நேரத்தில் மனதை அலைபாய விடாமல், இறைவனை தியானிப்பது எளிது.
* உடம்பும் சிந்தனை சக்தியும் இருந்தால் மட்டும் போதாது. மனதைப் பக்குவப்படுத்திப் பண்படுத்தவும் தெரிய வேண்டும். அப்போது தான் இறைவனைக் காணமுடியும்.
* இறைவன் அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறார். கத்தி இருந்து உடம்பை அறுத்துவிட்டால் நோய் குணமாகிவிடாது. பயன்படுத்தும் தொழில்நுட்பம் தெரியவேண்டும்.
* பிறரிடம் இறைவனைக் காண வேண்டிய நாம் மற்றவர்களை வெறுப்பதோ, பகைமை காட்டுவதோ நியாயமில்லை.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement