நமக்கும் கீழே உள்ளவர் கோடி
அக்டோபர் 25,2011,
11:10  IST
எழுத்தின் அளவு:

* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும், எல்லாச் செயல்களிலும் நடுநிலையை கைக்கொள்பவனும் நிச்சயம் ஏழ்மை அடைய மாட்டான்.
* தங்கமும் பட்டாடையும் எனது உம்மத்தினரில் (பின்பற்றுவோர்) ஆண்களுக்கு விலக்கப்பட்டும் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டும் உள்ளது.
* உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களைப் பாருங்கள், உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள்! அதுவே அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் தாழ்மையாக கருதாமல் இருப்பதற்கு துணைபுரியும்.
* செல்வம் என்பது பொருட்கள் அதிகமாக வைத்திருப்பதல்ல. போதும் என்ற மனம் படைத்திருப்பதே செல்வமாகும்.
* பிற்காலத்தில் என் உம்மத்தினர் செல்வச் சீமான்களாக இருப்பார்கள். ஆனால், சுவர்க்கத்தையே மறந்து விடுவார்கள்.
* செல்வச் செழிப்போடு வாழும்போது நீ இறைவனை நினைத்தால், நீ துன்பம் அடையும் போது இறைவன் உன்னை நினைப்பான்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement