கடவுளையே நம்பியிருங்கள்
அக்டோபர் 25,2011,
11:10  IST
எழுத்தின் அளவு:

* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.
* சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியதாகும்.
* களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமலும் உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்.
* அடிமையேயாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து நன்மையே பெறுவர்.
* சிற்றலைகளும் பேரலைகளும் என் மீது புரண்டோடுகின்றன. நாள்தோறும் கடவுள் தம் பேரன்பைப் பொழிகின்றார்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றவர். துன்ப நாளில் கடவுள் அவரை விடுவிப்பார்.
* இறந்தோரை உயிர்த்தெழச் செய்யும் கடவுளையே நம்பி இருக்க வேண்டும்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement