தூய பக்தியால் இறைவனைக் காணலாம்
செப்டம்பர் 04,2008,
10:44  IST
எழுத்தின் அளவு:

* உண்மை ஒன்றைச் சொல்கிறேன். கேளுங்கள். நீங்கள் உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதற்கிடையில் உங்கள் மனதை இறைவன்பால் திருப்ப வேண்டும். இல்லையேல் உங்கள் வாழ்வு அனர்த்தமாய் போய்விடும்.* சேற்றுமீன் சேற்றில் புதையுண்டு கிடந்தாலும் அதன் மீது சேறு படிவது கிடையாது. அதே போல், மனிதன் உலகில் வாழ்ந்தாலும், அவன் உலகப் பற்றில் தோய்ந்து விடக்கூடாது.* மனிதன் பந்தங்களில் சிக்கிக் கிடக்கிறான். குரு கடாட்சமின்றி இப்பந்தங்களில் இருந்து மனிதன் விடுதலை பெற முடியாது.* ஈரப்பதம் கொண்டுள்ள தீக்குச்சியை எவ்வளவுதான் உரசினாலும் தீப்பற்றாது. உலர்ந்த குச்சி உரசிய அளவிலேயே பற்றிவிடும். ஒருவனுடைய உள்ளத்தில் சிறிதளவு உலக ஆசை இருக்குமானாலும், அவனுக்கு இறையருள் கிடைக்காது.* பிரதிபலன் எதிர்பார்க்காத தூய்மையான அன்பினை சிலரிடத்தில் மட்டுமே காணமுடியும். பிரகலாதனிடம் அத்தகைய தூயபக்தி இருந்தது. அதனால் தான் பெருமாள் நரசிம்ம வடிவில் அவன் அழைத்தவுடனேயே தூணில் இருந்து வெளிப்பட்டார். அப்படிப்பட்டவர்கள் மிகவும் பாக்யவான்கள்.* கசிந்துருகி பக்தி நாட்டம் கொள்வது விடியற்காலை நேரம் போன்றது. விடியலைத் தொடர்ந்து சூரியோதயம் உண்டாகிறது. அருள் நாட்டத்தைத் தொடர்ந்து இறைக்காட்சி உண்டாகும்.

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement