கடவுளே! அமைதி கொடு!
செப்டம்பர் 04,2008,
10:52  IST
எழுத்தின் அளவு:

* உங்களுக்கு மிகவும் பிரியமான தெய்வத் தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த தெய்வத்தின் வடிவத்தை உங்கள் மனக்கண் முன்னே திரும்பத் திரும்ப எண்ணிப் பாருங்கள். உங்கள் நினைவிலும், வாக்கிலும் மீண்டும் மீண்டும் அத்தெய்வவடிவமும், நாமமும் வரட்டும். அதுவே, உங்கள் மனதுக்கும், நாவிற்கும் இனிமையாக இருக்கும்.* கடவுளிடம் நாம் எப்போதும் "மன அமைதியைக் கொடு' என்று மட்டும் வேண்டிக் கொண்டால் போதும். அதுவே சுகமானதும், நியாயமானதுமான பிரார்த்தனையாகும். இறைவன் நமக்கு மன அமைதியை இரண்டு விதமாகக் கொடுக்கலாம். ஒன்று நாம் எதை விரும்புகிறோமோ அதைக் கொடுத்து நம்முடைய ஆசையைத் தீர்த்து விடுவது. இன்னொன்று நம்முடைய மனத்தைப் பக்குவப்படுத்தி, இல்லாமையினால் ஏற்படும் ஏக்கத்தையும், தாபத்தையும் இல்லாமல் செய்துவிடுவது. இதில், இரண்டாவது முறையே மிகச்சிறந்தது.* நாள்தோறும் காலையிலோ, மாலையிலோ வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். குறித்த நேரத்தில் இறைவழிபாடு செய்வதே சிறந்தது. இந்நேரத்தை அடிக்கடி மாற்றி அமைக்கக் கூடாது. சிலசமயம் பிரயாணம், முக்கிய வேலைகள் இருந்தால் மட்டுமே நேரத்தை மாற்றலாம். ஆனால் ஜபம், தியானம், நாள் வழி பாடு போன்றவற்றை குறித்த நேரத்தில் செய்வதே சிறந்த பலனளிக்கும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement