பாராட்டுக்காக சேவை செய்யாதீர்
செப்டம்பர் 06,2008,
17:27  IST
எழுத்தின் அளவு:

* எந்த செயலை செய்யும்போதும் அவசரம் காட்டாதீர்கள். அவசரப்பட்டு செய்யும் செயலை சரியாக செய்ய முடியாது. சிலர் நேரமில்லை என்று சொல்லி அவசரப்பட்டு செயல்படுகின்றனர். இவ்வாறு அவசரப்படுவதால் அந்த வேலை மேலும் தாமதமாகுமே தவிர, சீக்கிரம் முடிந்து விடாது. ஒருமுகப்படுத்திய மனம் கொண்டவர்கள் எதிலும் அவசரம் காட்டுவதில்லை. அவர்களுக்கு பிறர் கடினம் என கருதும் செயல்களும், மிக எளிதாக தெரிகிறது.
* நீங்கள் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டுமென நினைத்தால், சுயநலம் பார்க்காமல் செயல்படுங்கள். சமூக சேவையில் ஈடுபடும்பொழுது பிறர் உங்களைப் பாராட்டலாம். அத்தகைய பாராட்டை நீங்கள் உதட்டளவில் மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவை, உங்களது கடமையை தடுக்கும் விஷமாகக்கூட மாறலாம் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
*வாழ்வில் தொடர்ந்து தோல்விகளே வந்தாலும், வருத்தம் கொள் ளாதீர்கள். தைரியத்தையும் இழந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும், அடுத்த முறை உங்களை வெற்றி பெறச் செய்யக்கூடிய அனுபவமாக இருக்கிறது. தோல்வியடைந்தபோது, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். அதே தவறு அடுத்தமுறை நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தோல்வி என்பது உங்களை தயார்படுத்துவதற்காக இறைவன் கொடுக்கும் நன்மையே ஆகும்.

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement