எளியவரே நாராயணன்
அக்டோபர் 31,2011,
15:10  IST
எழுத்தின் அளவு:

* கடவுளை அடைய வேண்டும் என்பதே லட்சியமாக இருக்க வேண்டும். அவருடைய படைப்பான உயிர்களிடம் காட்டும் கருணைக்கும், அவர்களுக்கு செய்யும் சேவைக்கும் வெகுமதி எதிர்பார்ப்பது சரியல்ல.
* மனிதன் தர்மத்தை கைவிட்டு உயிரினங்களுக்கு கெடுதல் செய்து துன்புறுத்துகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், அவன் தன் மனதை இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும்.
* எளியவர்களையும் நாராயணனாக கருதி தொண்டு செய்வதன் மூலம் பக்தி முழுமை அடைகிறது.
* மனிதனுக்கு, வாய் இறைவனின் புகழை பாடவும், கரங்கள் மலர்களால் பூஜிக்கவும், அறிவு உயிர்களுக்கு சேவை செய்வது பற்றி சிந்திக்கவுமே தரப்பட்டுள்ளது.
* நல்ல எண்ணங்களும், தூய சிந்தனைகளும் இருக்க வேண்டிய உள்ளங்களில் மாசும் தூசும் தங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* "நான் எது செய்தாலும், அது இறைவனுக்குச் செய்யும் சேவையே' என்று எண்ணித் தொண்டு புரிவதில் ஈடுபடுங்கள்.
* புனித எண்ணங்களிலும், தொண்டுகளிலும் உள்ளத்தை ஈடுபடுத்துவதே உண்மையான பக்தி.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement