எல்லாரும் தூய்மையானவர்களே!
நவம்பர் 01,2011,
09:11  IST
எழுத்தின் அளவு:

* மனிதனுக்கு, முயற்சி செய்வதைத் தவிர வேறு எதுவுமில்லை. இன்னும் அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.
* எவரெவர் எதைச் சம்பாதிக்கிறார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.
* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.
* எவர் பாவமன்னிப்பு கோரி, மேலும் நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத் தொடங்கிவிட்டிருக்கிறாரோ, அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மைகளாக மாற்றிவிடுவான்.
* (இறைவனின் அடியார்கள்) செலவு செய்யும்போது வீண் விரயமும், கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவு இந்த மித மிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement