நமது மூச்சுக்காற்று இதுவே!
நவம்பர் 07,2011,
09:11  IST
எழுத்தின் அளவு:

* அனைவருடனும் கைகோர்த்து சமுதாயம் முழுவதற்கும் உழைப்பவனே உண்மையான ஆன்மிகவாதி.
* அன்பே கடவுள் என்பதால் அன்பிலேயே வாழுங்கள். அன்பற்ற இதயம் வறண்ட தரிசு நிலத்துக்குச் சமம். அனைத்து செயல்பாடுகளிலும் அன்பை இணையுங்கள்.
* அன்பையும், தியாகத்தையும் மூச்சுக்காற்றாக எண்ணுங்கள். புலன்களை அடக்குங்கள். ஒருவன் ஆன்மிகத்தில் வெற்றி பெற வேண்டுமானால், அவனது புலனடக்கத்தின் மூலமே முடியும்.
* இறைவனின் பெயரைச் சொல்லி சேவை செய்யுங்கள். எவருக்கு சேவை செய்தாலும், இறைவனுக்கு செய்வதாகவே எண்ணி செய்யுங்கள்.
* நீங்கள் எந்த வேலை பார்த்தாலும், ஆன்மிகப் பணியாக, அதாவது இறைவனின் பணியாக எண்ணிச் செய்யுங்கள். வெறும் ஜபம், தியானம் என்பவை ஆன்மிகம் அல்ல.
* இறைவனிடம் எதையும் கேட்க வேண்டியதில்லை. தூய இதயம் இருந்தால் அவரே உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார்.
* நேரத்தை வீணடிக்காமல் இறைவனின் நாமத்தை கூறி, அதன் இனிமையில் தெய்வீகத்தை உணருங்கள்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement