உண்மையான ராமபக்தி
செப்டம்பர் 11,2008,
08:17  IST
எழுத்தின் அளவு:

* தனது கடமையைச் செய்வதே மிகச் சிறந்த பக்திமார்க்கம் என்பதை ராமாயணம் உணர்த்துகிறது. எவ்வளவு உயர்ந்தவர்களானாலும் ஆசையின் வயப்பட்டால் துன்பத்திற்கு ஆளாவர் என்பதை ராமாயணம் எடுத்துக் காட்டுகிறது. ராம நாமத்தை ஜபித்தால் இன்பமும் அமைதியும் உண்டாகும்.
* தந்தை, தாய், கணவன், மனைவி, புதல்வன், சகோதரன், நண்பன், தொண்டன் ஆகிய ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய அடிப்படை விதிமுறைகளை ராமாயணம் நமக்கு அழகாக எடுத்துச்சொல்கிறது.
* குடும்பமும், சமூகமும் முன்னேற வேண்டுமானால் ராமாயணத்தை விரிவாகப் படிக்கும் பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மனிதன் பின்பற்ற வேண்டிய தர்மங்களை ஸ்ரீமன் நாராயணன் இந்த மண்ணில் ராமசந்திர மூர்த்தியாக அவதரித்து பின்பற்றினார்.
* ராமனின் வாழ்வில் மூன்று பெண்கள் குறுக்கிட்டனர். தமோ குணம் கொண்ட தீயவளான தாடகையை வதம் செய்தார். ரஜோ குணம் படைத்த அகல்யைக்கு சாபவிமோசனம் தந்தார். சத்வகுணம் கொண்ட சீதையை ஏற்றுக்கொண்டார்.
* ராமனைப் போல நாமும் உடலாலும், உள்ளத்தாலும் பிறருக்குச் சேவை செய்யவேண்டும். எண்ணத் தூய்மையோடு தர்மத்தை வாழ்வில் பின்பற்ற வேண்டும். அதுவே, உண்மையான ராமபக்தியாகும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement