புண்ணியம் கிடைக்க வழி
நவம்பர் 13,2011,
16:11  IST
எழுத்தின் அளவு:

* கஷ்டங்களை பிறரிடம் கூறுவதைவிட பகவானிடம் கூறினால், அந்த கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும். அல்லது அதனை தாங்கி கொள்ளும் சக்தி கிடைக்கும்.
* பணத்தைக் கொண்டு இறைவனுக்கும் ஏழைகளுக்கும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்.
* உடலுக்கு ஒளியாய் இருப்பது கண், உயிருக்கு ஒளி தருவது அறிவு. உலக உயிர்களுக்கு அறிவு ஒளி தரும் கண்ணாக இருப்பவன் கண்ணன். தென்னாட்டுக்கு கிருஷ்ணன் மட்டுமல்லாமல், கண்ணனுமாகவும் ஆகிவிட்டான்.
* வாழ்க்கையில் எத்தனை துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனமடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்தவன் ஸ்ரீ ராமன்.
* தவறு செய்யாமல் இருக்க புத்தி தர வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பது தான் நமக்கு விமோசனம் என்று தெரிய வேண்டும்.
* அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி சந்தோஷப்படுபவள் அல்ல. மாறாக நமக்கு உறவாக இருந்து உதவி செய்யும் தாயும், தந்தையுமாய், அம்மையப்பனுமாய் இருக்கிறாள்.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement