மனஅமைதிக்கு எளிய வழி
நவம்பர் 13,2011,
16:11  IST
எழுத்தின் அளவு:

* கடவுளிடம் "மன அமைதியைக் கொடு', என்று வேண்டிக்கொண்டால் போதும். அதுவே சுகமானதும், நியாயமானதுமான பிரார்த்தனையாகும்.
* கடவுளின் அருளை உணர்ந்தவர்கள் அவர் இருப்பதை நம்புகிறார்கள், நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்த நம்பிக்கை வாழ்க்கைக்கு உறுதி தரும்.
* தூய்மையான பாத்திரம் போலத் துலக்கமாக இருக்கும் நல்ல உள்ளத்தில் இறைவனின் கருணையை ஏற்றுக் கொள்ளுங்கள். அது வாழ்வில் அளவிலாத நன்மைகளைத் தரும்.
* பகுத்தறிவுவாதிகள் எவ்வளவு தான் கற்றறிந்து வாதம் செய்தாலும், இறைவன் அருளை அடையும்போது தான் முழுமையான அமைதியைப் பெறுகின்றனர்.
* ஆசையின்றியும், பயன் கருதாமலும் செயல்களைச் செய்யுங்கள். அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அமைதியான மனநிலையுடன் இருப்பீர்கள்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement