வாழ்க்கை மலர்மாலை போன்றது
செப்டம்பர் 13,2008,
16:37  IST
எழுத்தின் அளவு:

*குளத்தில் நீர் இருந்தால், அதில் தவளைகள் அதிக அளவில் வசிக்கும். நீர் வற்றிவிடும் போது, வெளியேறி விடும். அதைப்போலவே பணம், பதவி, புகழ் இருக்கும் ஒருவனை நண்பர்கள் போல பலர் சூழ்ந்து கொள்கின்றனர். அவன் தன் செல்வங்களை இழந்து வறுமையில் வாடும்போது, அவர்கள் எல்லாம் விலகி விடுகிறார்கள். எனவே, பழகுபவர்கள் உண்மையாக பழகுகிறார்களா என்பதை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
* அன்பு செலுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரிடமும் அன்பு செலுத் துங்கள். அந்த அன்பினால் அவர்களுக்கு மட்டுமின்றி, உங் களுக்கும் நன்மை உண்டாகும். வீட்டில் எரியும் மின்சார பல்பினால் குறுகிய அறைக்கு மட்டுமே வெளிச்சம் கிடைக்கும். ஆனால், வானில் இருக்கும் நிலவானது, உலகத்திற்கே ஒளி கொடுக்கும். நீங்கள் நிலவைப் போல பரந்த அன்பு செலுத்துபவர்களாக இருங்கள். இத்தகையவர்களே இறைவனுக்கு பிடித்தமானவர்கள் ஆகிறார்கள்.
*வாழ்க்கை மலர் மாலை போன்றது. இதில் பிறப்பு, இறப்பு என இரண்டும் இரு முனைகளாக இருக்கிறது. இவ்விரு முனைகளுக்கிடையில் கனவு, சிந்தனை, எண்ணம், மகிழ்ச்சி, இன்பம் என பல மலர்கள் இருக்கிறது. மாலையில் இருக்கும் மலர்களைப் பார்க்கும்போது, மனம் மகிழ்ச்சியடைகிறது. முனைகளைப் பார்த்தால் பதட்டப்படுகிறது. எனவே, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ரசித்து வாழப்பழகிக் கொள்ளுங்கள்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement