செயல்களை பொறுத்தே விளைவு
டிசம்பர் 03,2007,
18:34  IST
எழுத்தின் அளவு:

தண்ணீரில் கல்லைப்போடும்போது, அலைகள் தோன்றி நீர்நிலையின் கரை வரையிலும் பரவும். இதுபோல, நம் மனதில் ஓர் எண்ணம் விழுந்தால் அந்த எண்ணம் நல்லதோ, தீயதோ உடல் எங்கும் பரவி விடுகிறது. மனம் என்னும் குளத்தில் உருவாகும் சிந்தனை அலைகள் கைகளை அடைந்து தீய செயல்களைச் செய்கிறது. விழிகளை அடைந்து தீய காட்சிகளைக் காண்கிறது. கால்களை அடைந்து தீய இடங்களுக்குச் செல்கிறது. ஆக, எண்ணங்களுக்கேற்பவே நாம் நல்ல செயல்களையோ கெட்ட செயல்களையோ மேற்கொள்கிறோம். எனவே மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண் டும்.


ஒருவர் சிறந்த மனிதராக திகழ மூன்று குணங்கள் தேவை. முதலில் நல்லவராக வாழவேண்டுமென்ற உறுதியான, அசையாத நம்பிக்கை வேண்டும். இரண்டாவதாக பொறாமை, வெறுப்பு, கர்வம் ஆகிய குணங்களிலிருந்து விடுபடவேண்டும். மூன்றாவதாக நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றில் ஓர் அமைப்போ அல்லது தனி நபரோ தொண்டு செய்யும்போது பாராட்டும் உள்ளம் வேண்டும்.


சர்க்கரையை விஷம் என நினைத்து, அதை நீரில் கரைத்து சாப்பிட்டால் தீமை எதுவும் உண்டாகிவிடாது. அதேசமயம் விஷத்தை நீரில் கலந்து, அதை கரும்புச்சாறு என்று நினைத்து குடித்தால் நிச்சயம் ஆபத்துதான் விளையும். எனவே தீய செயலை நல்லதென்று நினைத்து செய்தாலும், விளைவு தீயதாகவே இருக்கும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement