பெண்களே! அழகை பார்க்காதீங்க!
நவம்பர் 20,2011,
12:11  IST
எழுத்தின் அளவு:

* நம் குறைகளைப் பொறுத்து நம்மைக் காக்கும் பரமேஸ்வரன், அனைத்து உயிர்களிடமும் அன்பைக் காட்டுகிறான். நாமும் இறைவனின் அழிவற்ற மாறாத அன்பைப் பயில வேண்டும்.
* பசுமாட்டில் சுவாமியைத் தியானம் செய்வது என்பது கோ பூஜை செய்வது மட்டும் அல்ல, அதற்குள்ளே ஈஸ்வரன் இருப்பதாகவும் ஐதீகம்.
* கணவனுக்குள்ளும் ஈஸ்வரன் இருப்பதால், பெண்கள் தங்கள் கணவன் குணம் உள்ளவரா, இல்லையா, அழகுள்ளவரா என்று பாராமல் சேவை செய்ய வேண்டும்.
* இறைவனின் அருளைப் பெறும் வல்லமை பெற்றவர்கள், அருளை பாவிகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். இதனால், உலகம் அன்பினால் நிரம்பி ஆனந்த உலகமாக மாறும்.
* நமக்கு நெருக்கம் இல்லாதவரிடமும், குணமற்றவரிடமும், நமக்கு எந்தவித லாபமும் தர இயலாதவரிடமும் அன்பு கொள்வோமானால் அதுவே உண்மையான அன்பு.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement