இறைவன் யாரை நேசிக்கிறான்
நவம்பர் 24,2011,
09:11  IST
எழுத்தின் அளவு:

* உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை வழங்கி இருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக!
* நாம் இவர்களில் சிலருக்கு வேறுசிலரைவிட உயர் பதவியை அளித்தோம்; இவர்களில் சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக.
* இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள், (இதன் மூலமே) நீங்கள் வெற்றியடையக் கூடும்.
* திண்ணமாக, இறைவன் தீமைகளிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கிறான்.
* எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக் கொள்கின்றாரோ அவரே இறைவனின் நேசத்திற்குரியவராவார்.
* திண்ணமாக தன்னை முழுமையாக சார்ந்திருந்து செயல்படுவோரை இறைவன் நேசிக்கின்றான்.
* வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement