அச்சமும் ஆசையும் கூடாது
நவம்பர் 24,2011,
09:11  IST
எழுத்தின் அளவு:

* மனம் என்னும் கண்ணாடி பராசக்தியை தியானம் செய்யட்டும். அதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.
* வானத்தில் சுற்றும் பருந்தைப்போல சுதந்திரமாகத் திரிந்தாலும், இன்பமான விஷயங்களுக்கு மனித மனம் கட்டுப்பட்டு விடக்கூடாது. இறை சிந்தனையில் மட்டுமே அது மூழ்கியிருக்க வேண்டும்.
* உயர்ந்த, அமைதியான, பலமான, துணிவும், உறுதியும் கொண்ட சிந்தனைகளால் அறிவை நிரப்பிக்கொண்டு தியானம் செய்யுங்கள்.
* பூச்சிகளாலும், நோயாலும் மனிதர்கள் இறப்பதில்லை. கவலையாலும், பயத்தாலும் இறக்கின்றனர். அச்சத்தையும், ஆசையையும் ஒழித்தால் இறப்பும் தானாக ஒழிந்து விடும்.
* வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்பவன் புத்திசாலியாக மாட்டான். எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தாலும் வியர்வை தோன்றாதபடி தந்திரமாக செய்பவனே புத்திசாலி.
* சித்தத்தில் எப்போதும் சிவனை நினைத்தால் உனக்குள் சிவனைக் காணலாம். இதனால் துன்பங்கள் நீங்குவதுடன், அச்சமும் அகல்கிறது.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement